செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வாங்க குவிந்த பக்தர்கள் - கூட்ட நெரிசலில் 6 பேர் பலி!

09:17 AM Jan 09, 2025 IST | Murugesan M

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வாங்குவதற்காக அதிகளவில் பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisement

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. இதற்காக தேவஸ்தானம் சார்பில் விஷ்ணு நிவாஸம் பகுதியில் இலவச டோக்கன் வழங்கப்பட்டது.

இந்நிலையில், டோக்கன் வாங்குவதற்காக ஒரே நேரத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

Advertisement

அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தைச் சேர்ந்த மல்லிகா, பொள்ளாச்சியைச் சேர்ந்த நிர்மலா உட்பட 6 பேர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
Tags :
Devoteesdevotees diedFEATUREDfree darshan tokensMAINstampedeTirupati Ezhumalaiyan Temple.
Advertisement
Next Article