செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் உயிரிழப்பு - பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல்!

09:58 AM Jan 09, 2025 IST | Murugesan M

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன் எனக் கூறியுள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆந்திர அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், கூட்ட நெரிசலால் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவம் வேதனை அளிப்பதாக கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் எனவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
andhra pradesh governmentDevoteesdevotees diedFEATUREDfree darshan tokensMAINPM ModistampedeTirupati Ezhumalaiyan Temple.
Advertisement
Next Article