திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அசைவ உணவு சாப்பிட்ட பக்தர்கள் : எச்சரித்து அனுப்பிய போலீசார்!
05:18 PM Jan 18, 2025 IST | Murugesan M
திருப்பதி மலைக்கு கொண்டு வந்து திறந்தவெளியில் அசைவ உணவு சாப்பிட்ட கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பக்தர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பக்தர்கள் 28 பேர் திருப்பதி மலைக்கு வந்திருந்தனர். அவர்கள் கொண்டு வந்த முட்டை குருமா, வெஜ் பிரியாணி ஆகியவற்றை ஏழுமலையான் கோயில் எதிரில் இருக்கும் ராம்பகீச்சா பேருந்து நிலைய திறந்தவெளியில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.
Advertisement
இதனை அறிந்த கண்காணிப்பு அதிகாரிகள், அசைவு உணவு சாப்பிட்ட பக்தர்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். திருப்பதி மலையில் அசைவ உணவுகளுக்கு தடை இருப்பது தெரியாது என்று கும்மிடிப்பூண்டி பக்தர்கள் தெரிவித்தை அடுத்து, மீண்டும் இது போல் செய்யக்கூடாது என போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.
Advertisement
Advertisement