திருப்பத்தூரில் இடிந்துவிழும் நிலையில் அம்மன் கோயில் மண்டபம் - சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்!
08:30 PM Dec 07, 2024 IST | Murugesan M
திருப்பத்தூரில் இடிந்துவிழும் நிலையில் உள்ள அம்மன் கோயில் மண்டபத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாட்றம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
Advertisement
இந்நிலையில் கோயில் மண்டபத்தின் மேற்கூரையில் உள்ள சிமெண்ட் பூச்சு இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அச்சமடைந்த பக்தர்கள், அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் முறையான பராமரிப்பு பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.
Advertisement
Advertisement