For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை மீது அசைவ உணவு சாப்பிட்ட எம்.பி. - அண்ணாமைலை கண்டனம்!

06:36 AM Jan 23, 2025 IST | Sivasubramanian P
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை மீது அசைவ உணவு சாப்பிட்ட எம் பி    அண்ணாமைலை கண்டனம்

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலைமீது எம்.பி. நவாஸ்கனி உள்ளிட்டோர் அசைவ உணவை உண்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நவாஸ்கனியின் எக்ஸ் வலைதளப் பதிவை பகிர்ந்துள்ள அவர், இருதரப்பினர் இடையே பிரிவினையைத் தூண்டும் வகையில் திருப்பரங்குன்றம் மலைமீது அசைவ உணவை உண்டதாகவும், இது மதக்கலவரத்தை ஏற்படுத்தும் செயல்பாடு எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement

சுப்பிரமணிய சுவாமி கோயில், பல மதங்கள் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பே பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது எனவும், இத்தனை ஆண்டுகளாக தமிழக மக்கள் அனைத்து மதங்களின் வழிபாட்டு முறைகளை மதித்து நடந்து வருகின்றனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கெடுக்கும் வகையில் நடந்து கொண்டிருப்பது முட்டாள்தனமானது எனவும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.  இதுபோன்ற சமூக அமைதியை கெடுக்கும் வீண் நடவடிக்கைகளைக் கைவிட்டு இத்தனை ஆண்டு காலமாக தொடரும் சகோதரத்துவமான நடைமுறைகளை தொடர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement