திருப்புவனம் அருகே மின்வாரியம் பெயரில் மோசடி - வீடு வீடாக 50 ரூபாய் வசூல் செய்த பெண்களை தேடும் பொதுமக்கள்!
07:30 PM Nov 24, 2024 IST | Murugesan M
திருப்புவனம் அருகே தமிழக மின்வாரியத்தின் பெயரை கூறி, வீடுவீடாக சென்று 50 ரூபாய் வசூலித்து மோசடி செய்த பெண்களை பொதுமக்கள் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வில்லியரேந்தல் மற்றும் வன்னிகோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்ற 2 பெண்கள், தாங்கள் மின்சார வாரியத்தில் இருந்து வருவதாக அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர்.
Advertisement
பின்னர், வீட்டு மின் இணைப்பு பெட்டியில் 11 இலக்க எண் கொண்ட ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என கூறி, 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் 50 ரூபாய் பணம் வசூலித்துள்ளனர். இது தொடர்பாக மின்வாரியத்தில் விசாரித்தபோது வந்தவர்கள் மோசடி பேர்வழிகள் என தெரிய வந்தது. இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் மோசடி பெண்களை தேடிய போது அவர்கள் மாயமாகிவிட்டனர்.
Advertisement
Advertisement