செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திருப்பூர் பின்னலாடை கொரியர் நிறுவனத்தில் தீ விபத்து!

07:30 PM Dec 21, 2024 IST | Murugesan M

திருப்பூரில் பின்னலாடை கொரியர் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன..

Advertisement

மணியகாரம்பாளையம் பகுதியில் பின்னலாடைகளை கொரியர் செய்யும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. முதலிபாளையம் சிட்கோ பகுதியில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகள், இந்நிறுவனத்தின் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், கட்டடத்தின் ஒருபகுதியில் திடீரென தீப்பற்றி கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், போராடி தீயை அணைத்தனர்.

Advertisement

இந்த விபத்து காரணமாக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. மேலும், அப்பகுதி முழுவதும் கரும்பு புகை சூழ்ந்து காணப்பட்டது....

Advertisement
Tags :
Fire accidentTiruppurknitwear courier companyManiyakarampalayamMAIN
Advertisement
Next Article