திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றம்!
கார்த்திகை தீபத் திருவிழாவின் இறுதி நாளான இன்று அதிகாலை கோவிலுக்குள் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17ஆம் தேதி 64 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது அதனைத் தொடர்ந்து பத்து நாட்கள் பகலிலும், இரவிலும் சுவாமிகள் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதன் தொடர்ச்சியாக பத்தாம் நாளான இன்று அதிகாலை நான்கு மணிக்கு அண்ணாமலையார் கோவிலின் கருவறையின் முன்பு உள்ள மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
கோவிலின் கருவறையிலிருந்து ஒரு தீபம் எடுத்துவரப்பட்டு கருவறை முன்புள்ள மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இதற்காக இன்று அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்விக்கப்பட்டு சரியாக நான்கு மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இதற்காக கோவிலுக்குள் 5000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் இன்று மாலை சரியாக 6 மணிக்கு கோவிலுக்கு பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள மலை உச்சியின் மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
இன்று ஏற்றப்படும் இந்த மகா தீபம் 11 நாட்களுக்கு தொடர்ந்து எரியும். இதற்காக 4500 கிலோ நெய் உபயோகப்படுத்தப்பட உள்ளது. 1500 மீட்டர் காடா துணி பயன்படுத்தப்பட்டுள்ளது.
தீபத்திருவிழா காண்பதற்கு 35 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.