திருவள்ளூர் அருகே சூறைக்காற்று - நீரில் அடித்து செல்லப்பட்ட படகுகள்!
திருவள்ளூர் மாவட்டம் ஜமீலாபாத் மீனவ கிராமத்தில் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சூறைக்காற்று காரணமாக நீரில் அடித்து செல்லப்பட்டன.
Advertisement
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு கடற்கரை பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்துவருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அடுத்த ஜமீலாபாத் மீனவ கிராமத்தில் கனமழை பெய்து வருகிறது. பலமான காற்று வீசி வருவதால் கடற்கரை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5-க்கும் மேற்பட்ட படகுகள் நீரில் மூழ்கின.
இதைக் கண்ட மீனவர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் படகுகளை மீண்டும் கரைக்கு கொண்டுவரும் பணியில் ஈடுபட்டனர்.
100க்கும் மேற்பட்ட கட்டுமரங்கள், வலைகள் கடலில் அடித்து செல்லப்பட்டதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ள மீனவர்கள், அரசு தங்களுக்கு உதவிட வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.