திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் கார்த்திகை பௌர்ணமி விழா - திரளான பக்தர்கள் தரிசனம்!
கார்த்திகை பௌர்ணமியையொட்டி, சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் கார்த்திகை பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் கவசம் இல்லாமல் சுயம்புவாக தோன்றிய ஆதிபுரீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்வு துவங்கியது.
புனுகு சாம்பிராணி தைலாபிஷேக கார்த்திகை தீப உற்சவம் என்பது
சுயம்புலிங்கமாக புற்று வடிவில் தோன்றிய ஆதிபுரீஸ்வரர் மிகவும் பழமை வாய்ந்தவர் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தானாக தோன்றியதாகவும் ராமனின் மகன் லவா பிரதோஷம் தினத்தன்று இங்கு வந்து வழிபட்டது என கோவில் ஸ்தல புராணம் கூறுகிறது.
இந்த மூன்று நாட்களும் ஆதிபுரீஸ்வரர் மகாபிஷேகம், புனுகு சாம்பிராணி தைலாபிஷேகம், நடைபெறும். ஆண்டுக்கு ஒரு முறை மூன்று தினங்கள் மட்டுமே கவசம் இன்றி சுவாமியை பரிபூரணமாக தரிசிக்க முடியும் இதனால் பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் வருகை தருவார்கள்.
தியாகராஜ ஸ்வாமி ப பழக்கில் எழுந்தருளி வடிவுடையம்மன் ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் வெளிப்பிரகாரத்தில் உள்ள 16 கால் மண்டபம் அருகே சொக்கப்பானை கொளுத்தப்பட்டு பின்னர் சங்கநாதன் முழங்க நான்கு மாத வீதிகளில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது.
அபிஷேகத்திற்கு தேவையான தரமான சாம்பிராணி தைலம் திருக்கோவில் மூலமே விற்பனை செய்யப்படும் வெளியிலிருந்து கொண்டு வரும் சாம்பிராணி தைலம் அபிஷேகத்திற்கு ஏற்றுக்கொள்ள மாட்டாது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது