தூத்துக்குடியில் வடியாத மழை நீர் - உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்த குடியிருப்புவாசிகள்!
04:14 PM Dec 15, 2024 IST | Murugesan M
தூத்துக்குடியில் மழைநீர் வடியாததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்தனர்.
Advertisement
கனமழை காரணமாக கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழை நீர் சூழ்ந்தது. மேலும், P&T காலனி, கதிர்வேல் நகர் போன்ற பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
16 தெருக்களை கொண்ட P&T காலனியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் வீடுகளை பூட்டிவிட்டு, உறவினர்கள் வீடுகளிலும், நிவாரண முகாம்களிலும் தஞ்சமடைந்தனர்.
Advertisement
பள்ளிகளில் நாளை அரையாண்டு தேர்வு தொடங்கும் நிலையில், நீரை அப்புறப்படுத்தினால் மட்டுமே மாணவர்கள் தேர்வுக்கு முழுமையாக தயாராக முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
Advertisement