தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மத மாற்றத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை தேவை - இந்து மக்கள் கட்சி நூதன போராட்டம்!
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கிறிஸ்தவ மதமாற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சியினர் ஊர்வலமாக சென்று மருத்துவமனை முதல்வர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சமீபநாட்களாக கிறிஸ்தவ மதமாற்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை கண்டித்து இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்த குமார் தலைமையில் அக்கட்சியினர் தீச்சட்டி ஏந்தி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு திருநீர், குங்குமம் பிரசாதமாக வழங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக கிறிஸ்தவ மதமாற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் இந்துக்களுக்கும் அதற்கான அனுமதியளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.