தூய்மை இந்தியா திட்டம் - போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எல்.முருகன் பங்கேற்பு!
06:30 PM Oct 26, 2024 IST | Murugesan M
தூய்மை இந்தியா திட்டம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் நாடு முழுவதும் 11.5 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற தூய்மை இந்தியா திட்டம் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், தூய்மை இந்தியா திட்டம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் நாடு முழுவதும் 11.5 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Advertisement
பிரதமர் மோடியால் ஈர்க்கப்பட்ட தூய்மை மற்றும் நிலையான நடைமுறைகளை நோக்கிய நாடு தழுவிய மாற்றத்தை கொண்டாடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவை எல்.முருகன் சந்தித்து பேசினார். அமைச்சர் கவுதம் டெட்வால் அவர்களையும் அவர் சந்தித்தார்.
Advertisement
Advertisement