தென்கொரியாவை தொடர்ந்து மற்றொரு விமான விபத்து!
தென்கொரிய விமான விபத்தை தொடர்ந்து, ஒரே நாளில் அடுத்தடுத்து 2 வெவ்வேறு இடங்களில் விமான விபத்து நிகழ்ந்துள்ளது.
தென்கொரிய விமான விபத்தை தொடர்ந்து, கனடாவில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. ஏர் கனடா விமான நிறுவனத்தை சேர்ந்த விமானம், ஹாலிஃபாக்ஸ் ஸ்டான்ஃபீல்ட் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட போது, அதன் Landing gear உடைந்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து ஓடுபாதையில் சறுக்கிய விமானம், சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பயணிகளுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. இவ்விபத்தை தொடர்ந்து விமான ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதேபோன்று, நார்வேயில் இருந்து ஆம்ஸ்டர்டாமிற்கு புறப்பட்ட விமானம், தொழில்நுட்பக்கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில் ஓடுபாதையில் இருந்து விலகி சென்றது. Oslo விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் ஹைட்ராலிக் கோளாறு ஏற்பட்டதால், Sandefjord விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க முடிவு செய்யப்பட்டது.
தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி சென்றது. Boeing 737-800 ரகத்தை சேர்ந்த இந்த விமானத்தில் 182 பயணிகள் இருந்தனர். இந்த நிகழ்வினால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.