தென்கொரிய விமான விபத்து! : அனைத்து விமானங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்! : தென்கொரிய அரசு
12:12 PM Dec 30, 2024 IST
|
Murugesan M
தென்கொரிய விமான விபத்தில் 179 பேர் பலியான நிலையில், அனைத்து விமானங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
Advertisement
தென்கொரியாவின் முவான் விமான நிலையத்துக்கு வந்தடைந்த விமானம், ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று சுவர் மீது மோதி தீப்பிடித்தது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 179 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Advertisement
இந்நிலையில், தென்கொரியாவின் தற்காலிக அதிபர் சோய் சாங்-மோக் தலைமையில் தலைநகர் சியோலில் பேரிடர் மேலாண்மை கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய அவர், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும், மீட்பு பணிகள் நிறைவடைந்த பின்னர் அனைத்து விமானங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிட்டார்.
Advertisement
Next Article