தெலங்கானாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து - சென்னை ரயில்கள் தாமதம்!
02:00 PM Nov 13, 2024 IST | Murugesan M
தெலங்கானாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால், சென்னைக்கு ரயில்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பெல்லாரி - உத்தரப்பிரதேசத்துக்கு இரும்பு லோடு ஏற்றியபடி சரக்கு ரயில் சென்றுள்ளது. தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் ராமகுண்டம்-ராகவபுரம் இடையே சென்ற போது, எதிர்பாராத விதமாக சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.
Advertisement
இதில் 11 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டன. இதன் காரணமாக வடமாநிலங்களில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதே போல சென்னையில் இருந்து ரயில்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 17 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுபாதையில் திருப்பி விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் வருகை, புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
Advertisement
Advertisement