தெலங்கானாவில் மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர் கைது!
தெலங்கானாவில் மனைவியை கொன்று உடல் பாகங்களை குக்கரில், கணவர் வேகவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம் ஜிலேல குடா, நியூ வெங்கட்ராமா காலனியில் குருமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு வெங்கடமாதவி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 16-ம் தேதி கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது குருமூர்த்தி, வெங்கடமாதவியை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தொடர்ந்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேகவைத்து குளத்தில் வீசியுள்ளார். பின்னர் மனைவியை காணவில்லை என குருமூர்த்தி மீர்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் வெங்கடமாதவியை குருமூர்த்தியே கொலை செய்து விட்டு நாடகமாடியது தெரியவந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், குளத்தில் வீசப்பட்ட உடல் பாகங்களை தேடி வருகின்றனர்.