தேநீருடன் பிஸ்கெட் சாப்பிட்ட 3 வயது குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு!
திருவள்ளூரில் தேநீருடன் பிஸ்கெட் சாப்பிட்ட 3 வயது குழந்தை புரையேறியதால் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கும்மிடிப்பூண்டியை அடுத்த குருவராஜகண்டிகை கிராமத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் - அமுலு தம்பதியரின் 3 வயது குழந்தையான வெங்கடலட்சுமிக்கு, அண்மையில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில், தாய் அமுலு குழந்தைக்கு தேநீருடன் பிஸ்கெட்டை சாப்பிட கொடுத்தபோது புரையேறியதில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக குழந்தையை மீட்ட பெற்றோர் சிகிச்சைக்காக செங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த கவரப்பேட்டை போலீசார் குழந்தையின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.