செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தேனியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு தடை - பாஜக, இந்து முன்னணி எதிர்ப்பால் காவல்துறை நடவடிக்கை!

10:08 AM Jan 31, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து தேனியில் ஞாயிறு அன்று நடைபெற இருந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

விநாயகா ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகம் மற்றும் தேனி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சந்தானகிருஷ்ணன் ஏற்பாட்டில் பிப்ரவரி 2-ம் தேதி 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி நடத்தப்பட இருந்தது.

இந்த நிகழ்ச்சியை நடத்தினால் தமிழர்களின் பண்பாடு சீரழிந்து விடும் என பா.ஜ.க மற்றும் ஹிந்து முன்னணியினர் மனு அளித்திருந்தனர். இதனால் நிகழ்ச்சி நடத்துவதில் உள்ள சாதக பாதகங்களை ஆய்வு செய்ய கூடுதல் ஏ.எஸ்.பி., கேல்கர் சுப்ரமண்ய பாலசந்திராவுக்கு மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார்.

Advertisement

இதனைத்தொடர்ந்து ஆய்வு செய்த ஏ.எஸ்.பி. நிகழ்ச்சி நடந்தால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அறிக்கை சமர்ப்பித்தார். அதனடிப்படையில் எஸ்.பி., நிகழ்ச்சியை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் நிகழ்ச்சி குறித்து அனுமதி இன்றி பேனர் வைத்த நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement
Tags :
BJP Hindu munani opposeFEATUREDhappy street programHindu organizations.MAINtheni District Superintendent of Policetheni sp
Advertisement