தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் வரத்து குறைவு!
11:17 AM Dec 09, 2024 IST | Murugesan M
ராமநாதபுரத்தில் உள்ள தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் பறவைகளின் வரத்து கணிசமாக குறைந்துள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து நயினார்கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ள தேர்த்தங்கல் கிராமத்தில் பறவைகள் சரணாலயம் உள்ளது. சுமார் 30 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நத்தை கொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் வருகின்றன.
Advertisement
பின்னர் இனப்பெருக்க காலம் முடிந்ததும் ஏப்ரல், மே மாதங்களில் திரும்பி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன. இந்த நிலையில், சரணாலயத்தில் இந்த ஆண்டு முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் பறவைகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
Advertisement
Advertisement