For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

தொடர்ந்து அசத்தும் இந்தியா! : அந்நிய நேரடி முதலீட்டில் 1 ட்ரில்லியனை எட்டியது!

09:05 AM Dec 18, 2024 IST | Murugesan M
தொடர்ந்து அசத்தும் இந்தியா    அந்நிய நேரடி முதலீட்டில் 1 ட்ரில்லியனை எட்டியது

2024ம் ஆண்டு அந்நிய நேரடி முதலீட்டு பயணத்தில் ஒரு வரலாற்று சாதனையை இந்தியா படைத்துள்ளது. மொத்த அந்நிய நேரடி முதலீடுகள் $1 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இதனால், உலகளவில் இந்தியா பாதுகாப்பான முதலீட்டுக்கு ஏற்ற நாடாக தன்னை நிலை நிறுத்தியுள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த 10 ஆண்டுகளில் , பிரதமர் மோடி தலைமையில் இந்தியா , அனைத்து துறைகளிலும் வெற்றிநடை போடுகிறது என்று பொருளாதார அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Advertisement

மேக் இன் இந்தியா திட்டம், உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகை போன்ற பல நல்ல திட்டங்களுடன் ஏஞ்சல் வரியை நீக்கியதும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி விகிதங்களைக் குறைத்ததும், இந்தியா மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் கணிசமாக உயர்த்தியுள்ளன.

2014ம் ஆண்டு முதல், இந்த ஆண்டு வரை இந்தியா சுமார் 667.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில், மொத்த அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது. இது 2004ம் ஆண்டில் இருந்து, 2014ம் ஆண்டு வரை பெற்றதை விட 119 சதவீதம் அதிகமாகும்.

Advertisement

மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் மொரீஷியஸ் வழங்கி முதல் இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து 24 சதவீதத்துடன் சிங்கப்பூர்இரண்டாவது இடத்தில் உள்ளது.10 சதவீதத்துடன் அமெரிக்கா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

தொடர்ந்து 7 சதவீதத்துடன் நெதர்லாந்தும், 6 சதவீதத்துடன் ஜப்பான், 5 சதவீதத்துடன் இங்கிலாந்து, 3 சதவீதத்துடன் ஐக்கிய அரபு அமீரகமும் ஆகிய நாடுகள் உள்ளன.இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டில் ஜெர்மனி மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகள் முறையே 3 சதவீதம் பங்கு வகிக்கின்றன.

குறிப்பாக மொரிஷியஸிடமிருந்து 177.18 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், சிங்கப்பூரில் இருந்து 167.47 பில்லியன் டாலர்களையும், அமெரிக்காவிலிருந்து 67.8 பில்லியன் டாலர்களையும் இந்தியா பெற்றுள்ளது என்று அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

சேவைப் பிரிவு, கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள், தொலைத்தொடர்பு, வர்த்தகம், கட்டுமான மேம்பாடு, ஆட்டோமொபைல், ரசாயனங்கள் மற்றும் மருந்துகள் ஆகியவையே இந்தியாவில் அதிகமான அந்நிய முதலீடுகளைப் பெறும் முக்கிய துறைகளாகும். "மேக் இன் இந்தியா" திட்டத்தின் மூலம் கடந்த பத்தாண்டுகளில் இத்துறைகளில் 69 சதவீததுக்கும் அதிகமான அன்னிய நேரடி முதலீடுகள் வந்துள்ளன.

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு அவ்வளவு எளிதானல்ல. வினாடிக்கு 1 அமெரிக்க டாலர் என்ற கணக்கில், 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை அடைய 31,709 ஆண்டுகள் ஆகும்.

10 ஆண்டுகளில் இந்த சாதனையை இந்தியா படைத்துள்ளது. 2014ம் ஆண்டு, உள்நாட்டு உற்பத்தி வெறும் 2 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். வியக்க வைக்கும் வகையில், இந்த ஆண்டு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 3.89 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

இந்தியாவில் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுமார் 60 துறைகளில் அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது. இது பரந்த அடிப்படையிலான முதலீட்டு வாய்ப்புகளை பிரதிபலிக்கிறது என

பெரும்பாலான துறைகளில்,100 சதவீத அன்னிய நேரடி முதலீடுகள் தானியங்கி வழியில் அனுமதிக்கப் படுகின்றன. முதலீட்டாளர்கள் முதலீடுகளை செய்த பிறகு, ரிசர்வ் வங்கிக்குத் தெரிவித்தால் போதுமானது. தொலைத்தொடர்பு, ஊடகம் மற்றும் காப்பீடு போன்ற துறைகளுக்கு, சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் முன் அனுமதியைப் பெற வேண்டியது கட்டாயமாகும்.

சீட் நிறுவனங்கள், லாட்டரிகள், சூதாட்டம், ரியல் எஸ்டேட் மற்றும் புகையிலை உற்பத்தி போன்ற துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை இந்தியா தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி, பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா ஒரு சிறந்த முதலீட்டு இடமாக உயர்ந்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா அல்லது ஆசிய நாடுகளில் இருந்து பல்வேறு நாடுகளில் உள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இப்போது இந்தியாவை நோக்கி திரும்பி இருக்கிறார்கள்.

புவிசார் அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களில், இந்தியா தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது. 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய நேரடி முதலீடுகளைப் பெற்றது, இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறி வருகிறது என்றே சொல்லவேண்டும்.

Advertisement
Tags :
Advertisement