தொடர் மழை : சென்னை கடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை ரத்து!
01:20 PM Nov 30, 2024 IST | Murugesan M
பலத்த மழை காரணமாக சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையிலான பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசி வருவதால், சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது.
Advertisement
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையிலான பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement