தொழில்நுட்ப சிக்கல் காரணமாக Space Docking ஒத்திவைப்பு - இஸ்ரோ அறிவிப்பு!
விண்வெளியில் இன்று நடைபெற இருந்த Space Docking, தொழில்நுட்ப சிக்கல் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Advertisement
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ 'ஸ்பேடக்ஸ்' என்ற திட்டத்தின் கீழ், விண்வெளியில் செயற்கைக்கோள் மற்றும் விண்கலங்களை இணைக்கும் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்ய 2 புதிய செயற்கைக்கோள்களை வடிவமைத்தது.
இந்த 2 செயற்கைக் கோள்களும் பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த 30-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து விண்வெளியில் இன்று காலை 8 மணிக்கு நடைபெற இருந்த Space Docking ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
செயற்கைக்கோள்கள் நெருங்கி வந்த நிலையில், தொழில்நுட்ப சிக்கல் காரணமாக இணைப்பு பணி ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரோ வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.