தோசைக்கு உலகெங்கும் இருக்கு மவுசு!
டேஸ்ட் அட்லஸின் உலகின் மிகச்சிறந்த Pan Cake-களின் பட்டியலில் இந்தியாவின் தோசை மற்றும் மசாலா தோசை 10 மற்றும் 12ம் இடங்களை பிடித்துள்ளன.
தென்னிந்திய உணவுகளில் பலருக்கும் மிகவும் பிடித்த உணவு வகைகளுள் ஒன்று தோசை. சாதாரண தோசை, மசாலா தோசை, வெங்காய தோசை, ஆனியன் ஊத்தாப்பம், பனீர் தோசை, பீட்ரூட், கேரட் தோசை, சிறுதானிய தோசை, கறி தோசை, மீன்குழம்பு தோசை உள்ளிட்ட பல வகைகளில் தோசை செய்யலாம்.
உளுந்து, அரிசி, வெந்தயம் சேர்த்து அரைக்கப்படும் மாவில் இட்லி, தோசை என விதவிதமாக உணவு செய்யலாம். இப்படி பல விதமாக செய்யும் தோசை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக மாறியுள்ளது.
இந்நிலையில் பிரபலமான உணவு மற்றும் பயணங்களை நிர்வகிக்கும் நிறுவனமான TasteAtlas - 2023- 2024 ம் ஆண்டு மிகவும் பிரபலமான உணவுகள் இடங்கள் குறித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்நிறுவனம் உலகில் சிறந்த உணவகங்கள், சுற்றுலா தளங்கள் உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக ஆராய்ந்து அது குறித்து விமர்சனம் செய்யும். சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தென்னிந்தியாவின் பிரபல உணவான தோசை பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தென்னிந்தியாவின் தோசைக்கு நல்ல ரேட்டிங்க் கிடைத்துள்ளது. இது PanCake பிரிவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு. ’Crêpe' - என்ற மெலிதாக தயாரிக்கப்படும் Pancake முதலிடம் பிடித்துள்ளது. அதேபோல் மசாலா தோசை 12-வது இடத்தை பிடித்துள்ளது.