For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 9 CRPF வீரர்கள் வீர மரணம்!

04:37 PM Jan 06, 2025 IST | Murugesan M
நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 9 crpf வீரர்கள் வீர மரணம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் நடத்திய IED வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 9 CRPF வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜாபூர் பகுதியில் 9 CRPF வீரர்களுடன் சென்ற ராணுவ வாகனம் மீது நக்சல்கள் அதிசக்தி வாய்ந்த IED குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

Advertisement

இந்த தாக்குதலில் ராணுவ வாகனத்தில் பயணித்த 9 வீரர்களும் வீர மரணம் அடைந்தனர். நாராயண்பூர், தாண்டேவாடா, பிஜாபூர் பகுதியில் ராணுவ கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு திரும்பும் வழியில் இந்த கோர சம்பவம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன் பஸ்தார் பகுதியில் நக்சல்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 நக்சல்கள் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement