நக்சல் தீவிரவாதத்தை நியாயப்படுத்தும் விடுதலை 2 திரைப்பட குழு மீது நடவடிக்கை தேவை - அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்!
நக்சல் தீவிரவாதத்தை நியாயப்படுத்தியும், பெருமைப்படுத்தியும் வெளியாகியிருக்கின்ற விடுதலை திரைப்பட குழுவினர் மீது "உபா" சட்டம் பாய வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பதிவில், ஆயுதம் தாங்கிய பயங்கரவாதத்தை சகஜப்படுத்துகின்ற விடுதலை இரண்டு திரைப்படத்தின் மீது தேசிய புலனாய்வு முகமை கவனம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார் .
காவல்துறையின் விசாரணை மற்றும் காவல் கொடுமைகளை அம்பலப்படுத்தும் மறைவில் நக்சல்வாதத்தையும் கௌரவப்படுத்துகிறார் திரைப்படத்தின் இயக்குனர் என அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டியுள்ளார்.
மேலும், திரையரங்கை பிரச்சார மேடையாக மாற்றி, தமிழக இளைஞர்கள் மத்தியில் பயங்கரவாதிகளை கதாநாயகன் ஆக்குகிறார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடுதலை 2 திரைப்படம் மூலம் பாரதத்தின் அடுத்த ரெட் காரிடாராக தமிழகத்தை மாற்ற துடிக்கும் சக்திகளை திமுக ஊக்குவிப்பது அம்பலமாகி இருக்கிறது என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.