செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நடிகர் சயிப் அலிகானுக்கு அறுவை சிகிச்சை - அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்!

04:52 PM Jan 16, 2025 IST | Sivasubramanian P

பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலிகானுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்ட நிலையில், அவர் தற்போது அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின், பந்த்ராவில் சயிப் அலிகான் வீடு உள்ளது. அங்கு அதிகாலை அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் நுழைந்தார். அப்போது அங்கிருந்த பணிப்பெண்ணுடன் அந்த மர்மநபர் வாக்குவாதம் செய்துள்ளார்.

சத்தம் கேட்டு அங்குவந்த சயிப் அலிகானை, அந்த நபர் கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடினார். இதனால் முதுகெலும்புக்கு அருகில் உட்பட மொத்தம் ஆறு இடத்தில் காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Advertisement

தற்போது சயிப் அலிகான் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கு இடமான 3 பேரை பிடித்தும், 8 தனிப்படை அமைத்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement
Tags :
BandraFEATUREDMaharastraMAINmumbaiSaif Ali KhanSaif Ali Khan attackedSaif Ali Khan out of dangerSaif Ali Khan surgery
Advertisement
Next Article