For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதிலளிக்க ஆணை!

04:43 PM Nov 27, 2024 IST | Murugesan M
நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நயன்தாரா  விக்னேஷ் சிவன் பதிலளிக்க ஆணை

நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

நடிகை நயன்தாரா அண்மையில் தனது 40வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி, அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஆவணப் படம் ஒன்று தயாரிக்கப்பட்டு, நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

Advertisement

இந்த ஆவணப்படத்தில், தனது கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நயன்தாரா நடித்த 'நானும் ரவுடி தான்' படத்தின் பாடல்களையும், காட்சிகளையும் பயன்படுத்த அவர்கள் விரும்பினர்.

இதற்காக 2 ஆண்டுகளாக அனுமதி கேட்டும், அப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் அனுமதி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

Advertisement

இதற்கிடையே ஆவணப்படத்தின் டிரைலரில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் தன்னுடைய அனுமதி இல்லாமல் 3 வினாடி காட்சிகளைப் பயன்படுத்துவதற்கு நயன்தாராவிடம் 10 கோடி அபராதம் கேட்டு தனுஷ்நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இதனால், நேரடியாக தனுஷை விமர்சித்து நயன்தாரா அறிக்கை விட்டார். இதற்கு, பல நடிகைகள் ஆதரவு தெரிவித்தனர்.

மேலும், அவரது பிறந்தநாள் அன்று வெளியான அந்த ஆவணப்படத்தில் சுமார் 37 வினாடிகள் நானும் ரவுடி தான் படக்காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.

Advertisement
Tags :
Advertisement