கோவை அருகே யானை தாக்கியதில் முதியவர் பலி - நடை பயிற்சிக்கு சென்ற போது நிகழ்ந்த சோகம்!
11:32 AM Jan 23, 2025 IST | Sivasubramanian P
கோவை அருகே நடைபயிற்சிக்குச் சென்ற முதியவர் யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை புறநகர் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டுள்ள காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், தாளியூர் கிராமத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த நடராஜ் என்ற முதியவரை, ஒற்றைக் காட்டு யானை தாக்கியுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
Advertisement
தகவல் அறிந்து சென்ற போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். ஆனால், இறந்தவர் உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement