செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நடைபாதையில் தூங்கியவர்கள் மீது லாரி ஏறி இறங்கியதில் மூவர் பலி!

01:12 PM Dec 23, 2024 IST | Murugesan M

மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது லாரி ஏறி இறங்கிய விபத்தில் குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

Advertisement

புனே நகரின் வகோலி சௌக் பகுதியில் உள்ள நடைபாதையில் 12 பேர் அசந்து தூங்கி கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி, நிலைதடுமாறி அவர்கள் மீது ஏறி இறங்கியது. இதில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

விபத்தில் படுகாயமடைந்த 6 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

Advertisement
Tags :
MAINThree people were killed when a truck ran over people sleeping on the pavement!
Advertisement
Next Article