நமது சமுதாயத்தின் தூண்களாக அரசியலமைப்பு சட்டம் திகழ்கிறது! - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
நமது சமுதாயத்தின் தூண்களாக அரசியலமைப்பு சட்டம் திகழ்கிறது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
Advertisement
இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 75-ம் ஆண்டு தினம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மக்களவை தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டு நிறைவையொட்டி நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. மேலும், சித்திர எழுத்துக்களால் ஆன அரசியலமைப்பு புத்தகமும் வெளியிடப்பட்டது. தொடர்ந்து இந்திய அரசியலமைப்பின் பெருமை குறித்த குறும்படம் திரையிடப்பட்டது.
இதையடுத்து விழாவில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நமது சமுதாயத்தின் தூண்களாக அரசியலமைப்பு சட்டம் திகழ்கிறது என தெரிவித்தார். மேலும், மக்களின் உரிமைகளை அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கிறது என்றும் அவர் கூறினார்.