நாகம்மாள் புத்துக்கோவில் திருவிழா கோலாகலம்!
11:53 AM Dec 16, 2024 IST
|
Murugesan M
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நாகம்மாள் புத்துக்கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
Advertisement
கணக்கனேந்தல் கிராமத்தில் உள்ள நாக சிவசத்தியம்மன் புத்துக்கோயிலின் 6-ம் ஆண்டு திருவிழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து நடைபெற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அலகு குத்தியும், முளைப்பாரி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
Next Article