நாகை மாவட்ட பாஜக தலைவர் அமரர் கார்த்திகேயன் திருவுருவப் படத் திறப்பு - அண்ணாமலை பங்கேற்பு!
நாகை மாவட்ட பாஜக தலைவர் அமரர் கார்த்திகேயன் திருவுருவப் படத் திறப்பு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இன்றைய தினம், நாகப்பட்டினத்தில், சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமான, நாகப்பட்டினம் பாஜக மாவட்ட தலைவர் அமரர் கார்த்திகேயன் திருவுருவப் படத் திறப்பு விழாவில் கலந்து கொண்டேன்.
கல்விப் பணிகளிலும், அரசியல் பணிகளிலும் மிகவும் சிறந்து விளங்கியவர். நாகப்பட்டினம் மாவட்டத்தில், பல்வேறு கல்வி நிறுவனங்களை உருவாக்கி, பல ஆசிரியர்கள், மாணவர்களைத் திறம்பட உருவாக்கியவர்.
நாகப்பட்டினம், மயிலாடுதுறை சட்டமன்ற மற்றும் பாராளுமன்றத் தொகுதிகளில் பாஜகசார்பாகப் போட்டியிட்டு, பொதுமக்களின் அன்பைப் பெற்றவர். கடந்த 2024 பாராளுமன்றத் தேர்தலில், நாகப்பட்டினம் தொகுதி பொறுப்பாளராகச் சிறப்பாகப் பணியாற்றியவர்.
எதிர்பாராத நேரத்தில் அவரது மறைவு, கட்சிக்கும், நாகப்பட்டினம் மாவட்டத்துக்கும் பேரிழப்பாகும். இந்த விழாவில், பல்வேறு மாவட்டத் தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.