நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் கண்ணியம் காக்க வேண்டும்! : ஓம் பிர்லா
04:49 PM Nov 25, 2024 IST
|
Murugesan M
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் கண்ணியம் காக்க வேண்டுமென மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தினார்.
Advertisement
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய அவர், அரசியலமைப்பு சட்டத் தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், நாளை கூட்டுக்குழு கூட்டத்தில் ஆக்கபூர்வமான விவாதத்தை உறுப்பினர்கள் முன்வைக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
Advertisement
மேலும், போராட்டம் என்ற பெயரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபடாமல், கண்ணியம் காக்க வேண்டுமென ஓம் பிர்லா கேட்டுக்கொண்டார்.
Advertisement
Next Article