நாட்டின் நலனுக்கு ஏற்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட பட்ஜெட் : முதலமைச்சர் ரங்கசாமி வரவேற்பு!
02:27 PM Feb 02, 2025 IST
|
Murugesan M
நாட்டின் நலனுக்கேற்ற பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
Advertisement
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய நிதிநிலை அறிக்கையானது மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
குறிப்பாக நாட்டின் முதுகெலும்பாக விளங்கக்கூடிய வேளாண்துறையை மேலும் வளர்ச்சியடைய செய்வதாக பட்ஜெட் அமைந்துள்ளது என கூறியுள்ளார்.
Advertisement
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி அவர்களுக்கு நம்பிக்கையை அளிப்பதாக பட்ஜெட் அமைந்துள்ளது என்றும் ரங்கசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
Advertisement