நாட்டின் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை! : பிரதமர் மோடி
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் 180 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடியது வெறும் ஆரம்பம் தான் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Advertisement
ஜம்மு காஷ்மீரில் புதிய ரயில்வே கோட்டம் அமைக்கப்பட்ட நிலையில், டெல்லியில் இருந்து காணொளி வாயிலாக பிரதமர் மோடி அதை திறந்துவைத்தார். அதேபோல், தெலங்கானா மாநிலம் சார்லபள்ளியில் புதிய ரயில் முனையத்தை திறந்துவைத்த பிரதமர் மோடி, ஒடிசா ராயகடா ரயில்வே கோட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
புதிய திட்டங்களை தொடங்கிவைத்த பின் உரையாற்றி பிரதமர் மோடி, நாட்டின் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என தெரிவித்தார். மேலும், ரயில்வே துறையில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் நாட்டின் அடையாளத்தை மாற்றியுள்ளது எனக்கூறிய பிரதமர் மோடி, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் 180 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடியது வெறும் ஆரம்பம் தான் எனவும் தெரிவித்தார்.