செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும்! : இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

11:30 AM Nov 25, 2024 IST | Murugesan M

வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு  மண் டலமாக வலுபெற்று 2 நாட்களில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ள நிலையில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து இரண்டு நாட்களில் புயலாக மாறி தமிழகம் - இலங்கை கடற்கரையை நோக்கி நகரக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவலளித்துள்ளது.

Advertisement
Tags :
FEATUREDMAINTomorrow the depression will strengthen! : India Meteorological Department forecast!
Advertisement
Next Article