நிதி நிறுவன அடியாட்களை விரட்டியடித்த அதிமுக பிரமுகர்!
சேலம் அருகே தனியார் நிதி நிறுவன உரிமையளருக்கும் அதிமுக பிரமுகருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள மூர்த்தி பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முக மூர்த்தி. இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை கோவையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து 85 லட்சம் கடன் பெற்றிருந்தார்.
இந்நிலையில் சண்முக மூர்த்தி கடந்த சிலமாதங்களாக கடன் தொகைக்கான வட்டி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் நிதி நிறுவனத்தின் உரிமையாளர் சரவண சூசை தனது ஆதரவாளர்களுடன் சென்று சண்முக மூர்த்தியிடம் வட்டி பணம் கொடுக்குமாறு மிரட்டி உள்ளார்.
இதையறிந்த அப்பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் ராஜா, விவசாயிக்கு ஆதரவாக சென்று நிதி நிறுவன அடியாட்களை அங்கிருந்து விரட்ட முயன்றார். இது குறித்த வீடியோ காட்சிகளை வெளியான நிலையில் இரு தரப்பினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.