நீட் தேர்வை ஆன்லைன் மூலமாக நடத்துவது குறித்து ஆலோசனை! - தர்மேந்திர பிரதான்
02:47 PM Dec 17, 2024 IST | Murugesan M
ஆன்லைன் வாயிலாக நீட் தேர்வை நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், நிபுணர் குழு அறிக்கையின்படி நீட் தேர்வு முறைகளில் சீர்திருத்தம் செய்யப்படும் என தெரிவித்தார்.
Advertisement
எதிர்காலத்தில் தொழில்நுட்ப உதவியுடன் நவீன முறையில் நீட் தேர்வை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், நீட் தேர்வை ஆன்லைன் மூலமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் தர்மேந்திர பிரதான் கூறினார்.
மேலும் 2025-ம் ஆண்டிலிருந்து உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வை மட்டும் தேசிய தேர்வு முகமை நடத்தும் என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
Advertisement
Advertisement