நீலகிரியில் வாகனங்களை வழிமறிக்கும் ஒற்றைக் காட்டு யானை!
04:05 PM Jan 29, 2025 IST
|
Murugesan M
நீலகிரியில் தொடர்ந்து வாகனங்களை வழிமறிக்கும் ஒற்றைக் காட்டு யானையால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு பயணிகள் கடும் அச்சமடைந்துள்ளனர்.
Advertisement
உதகையிலிருந்து மைசூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பந்திப்பூர் புலிகள் காப்பகம். இங்கிருந்து அண்மையில் வெளியேறிய ஒற்றை காட்டு யானை, லாரிகளை வழிமறித்து காய்கறிகளை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது.
லாரி ஓட்டுநர்கள் யானையிடம் இருந்து தப்பிக்க வேகமாக வாகனங்களை இயக்கி வருகின்றனர். இந்நிலையில்,
சுமார் ஒரு மணி நேரம் காட்டு யானை வாகனங்களை வழிமறித்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Advertisement
ஒற்றைக் காட்டு யானையின் நடமாட்டத்தை பந்திபூர் வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
Advertisement