நேரத்துக்கு ஏற்றபடி முடிவு செய்து கொள்ளலாம் என்ற முடிவில் திருமாவளவன் - தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!
10:33 AM Dec 07, 2024 IST
|
Murugesan M
விசிக தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் போடுவது தெளிவாக தெரிவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
Advertisement
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவின்போது, விசிக தலைவர் திருமாவளவனின் மனசாட்சி இங்கேதான் இருக்கிறது என கட்சியின் பொதுச்செயலாளரே கூறியிருப்பதாக பதிவிட்டுள்ளார்.
இதன்மூலம், தவெக தலைவர் விஜய்யிடம் ஒரு வேடமும், மன்னர் ஆட்சி நடத்தும் முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஒரு வேடமும் போடுவது தெளிவாக தெரிவதாக குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
திமுகவுக்கு எதிராக ஒரு வேடமும், ஆதரவாக ஒரு வேடமும் போடுவதுதான் நேர்மையான முடிவா? என கேள்வி எழுப்பியுள்ள தமிழிசை சௌந்தரராஜன்,
நேரத்துக்கு ஏற்றபடி முடிவுசெய்து கொள்ளலாம் என்ற முடிவில் திருமாவளவன் இருப்பதாக விமர்சித்துள்ளார்.
Advertisement
Next Article