செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பசுவின் கோமியம் டாஸ்மாக்கை விட மோசமானது இல்லை : தமிழிசை சௌந்தரராஜன்

06:00 PM Jan 21, 2025 IST | Murugesan M

பசுவின் கோமியம் டாஸ்மாக்கைவிட மோசமானது இல்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ஆயுர்வேதத்தில் பசுவின் கோமியம், அமிர்த நீர் என சொல்லப்பட்டிருக்கிறது.  80 வகையான நோய்களுக்கு பசுவின் கோமியம் மருந்தாக உள்ளது.

Advertisement

மாட்டு சாணம் கிருமி நாசினி என்றால், மாட்டு கோமியத்திலும் கிருமி நாசினி இருக்கிறது. மாட்டுக்கறியை சாப்பிடுகிறார்கள், மாட்டுச் சாணத்தை பயன்படுத்துகிறார்கள். விஞ்ஞான பூர்வ அமிர்த நீரான கோமியத்தை பயன்படுத்தக்கூடாது என கூறுகிறார்கள்

கோமியத்தில் ஆராய்ச்சி பூர்வமாக, நுண்ணுயிர் கிருமிகளை தடுப்பதை கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதனால்தான் வீட்டின் முன் தெளிப்பார்கள்.‌

ஆராய்ச்சி பூர்வமாக, ஆயுர்வேதத்தில் மாட்டின் சிறுநீர் என்ற கோமியம் மருந்து என்று எழுதப்பட்டிருக்கிறது. அதை அமிர்த நீர் என்று குறிப்பிடுகிறார்கள். ஆயுர்வேதத்தில் அது மருந்து என்று சொல்லி இருக்கிறார்கள்.‌

தமிழ்நாட்டில் சங்க இலக்கியத்தில் மாட்டு சாணம் பூசிய முற்றங்கள் சொல்லப்பட்டிருக்கிறதா இல்லையா? மாட்டு சாணத்தில் கிருமி நாசினி இருக்கிறது என்றால், மாட்டு சிறுநீரில் கிருமி நாசினி இருக்கிறது.

எல்லா மிருகங்களையும் நாம் சொல்லவில்லை.‌ இந்த சிறுநீருக்கு இந்த குணம் இருக்கிறது என்று ஆராய்ச்சி பூர்வமாக சொல்வதாகவும் மியான்மர் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இதை எடுத்துக் கொள்கிறார்கள். இதை ஒட்டுமொத்தமாக புறந்தள்ள முடியாது.‌ ஆயுர்வேதத்தில் மருந்தாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

80 வகையான நோய்களுக்கு இதை பயன்படுத்தலாம் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. அதில் அவர் (காமகோடி) சொன்ன காய்ச்சல் 80 வகைகளில் ஒன்றாக இருந்திருக்கலாம்.

காமகோடி ஒரு அறிவுப்பூர்வமாக விஞ்ஞானபூர்வமாக ஒரு தொழில்நுட்பக் கல்லூரியை தலைமை தாங்கி கொண்டிருப்பவர் சும்மா சொல்வாரா?

என் உணவு என் உரிமை என்று சொல்கிறீர்கள்.‌ ஒரு இடத்தில் மாட்டு இறைச்சிக் கொண்டு வீசுகிறீர்கள்.‌ விஞ்ஞானபூர்வமாக அது மருந்து என்று சொல்லும் போது ஏன் ஒத்துக்கொள்ள மாட்டிங்கிறீர்கள்?

பாஜகவும் இல்லையென்றால் இந்திய பண்பாட்டு முறையில் எது சொன்னாலும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அவருக்கு என்ன உள்நோக்கம் இருக்க முடியும்? பஞ்சகாவியம் என்பது அமேசானில் கிடைக்கிறது. அதனால் இது அறிவியல் புறமாக நிரூபிக்கப்பட்டது. நான் அல்லோபதி படித்த டாக்டர். ஆனால் ஆயுஷ் integrated medicine ல் நம்பிக்கை இருக்கிறது. அதில் எனக்கு இதிலும் நம்பிக்கு இருக்கிறது.

தமிழகத்தில் கோமியம் விற்பனை தூவங்கினால் மதுபானம் விற்பனை குறையும் என்று நினைக்கிறார்களா? ஒருவேளை அப்படி நினைக்கிறார்களோ என்னவோ? கோமியம் ஒன்றும் டாஸ்மாக்கை விட கெட்டதில்லை என்று நினைக்கிறேன்.‌ அதனால் டாஸ்மாக் பற்றி கவலைப்பட்டு கொண்டிருக்கிறார்கள்  எனத் தெரிவித்தார்.

Advertisement
Tags :
bjpMAINTamilisai Soundararajantn bjpபிஜெபி
Advertisement
Next Article