செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற மளிகைப் பொருட்கள் பறிமுதல்!

12:40 PM Jan 23, 2025 IST | Murugesan M

தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement

இனிகோ நகர் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக சில மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அங்கு சென்று சோதனை நடத்தியபோது, 70 லட்ச ரூபாய் மதிப்பிலான 3 ஆயிரம் கிலோ புளி, மளிகைப் பொருட்கள் மற்றும் மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Advertisement

Advertisement
Tags :
MAINSmuggling groceriesSmuggling groceries to Sri Lanka by boatsri lankatamil janam tv
Advertisement
Next Article