படம் பார்க்க சென்ற பெண் உயிரிழந்த விவகாரம் - நடிகர் அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு!
11:24 AM Dec 06, 2024 IST | Murugesan M
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் மீது ஹைதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியை அல்லு அர்ஜூன் உள்ளிட்ட படக் குழுவினர், ரசிகர்களுடன் கண்டு ரசித்தனர். இந்த சிறப்புக் காட்சிக்காக திரையரங்கில் பெரும் எண்ணிக்கையில் ரசிகர்கள் கூடியிருந்தனர்.
Advertisement
இந்நிலையில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் என பலரும் நெரிசலில் சிக்கி மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடியும் நடத்தினர். அப்போது ரசிகர்கள் சிதறி ஓடிய நிலையில் பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.
இந்த விவகாரத்தில் திரையரங்கு நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், நடிகர் அல்லு அர்ஜூன் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Advertisement
Advertisement