செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பட்ஜெட் லட்சினையில் இந்திய ரூபாய்க்கான ₹ குறியீட்டை நீக்கியது முட்டாள்தனமானது - அண்ணாமலை கண்டனம்!

05:09 PM Mar 13, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

தமிழக பட்ஜெட் லட்சினையில் தேவநாகரி குறியீடு நீக்கப்பட்டது முட்டாள்தனமான செயல் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

Advertisement

2025 -26ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கான புதிய லட்சினையை அரசு வெளியிட்டுள்ளது.

அதில், இந்திய ரூபாய் குறியீடான தேவநாகரி குறியீடு நீக்கப்பட்டு ரூ என்ற எழுத்து சேர்க்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த செயலுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ரூபாய் லட்சினையை உருவாக்கியது திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் மகன் உதயகுமார் என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு தமிழர் உருவாக்கிய ரூபாய் குறியீட்டை ஒட்டுமொத்த பாரதமும் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அண்ணாமலை, பட்ஜெட் லட்சினையில் ரூபாய் குறியீட்டை நீக்கியது முட்டாள்தனமான செயல் எனவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Advertisement
Tags :
FEATUREDMAINRemoving the ₹ symbol for the Indian rupee in the budget speech is foolish - Annamalai condemns!Tamil Nadu budget to be presented tomorrowtoday TN ASSEMBLY
Advertisement