பட்டாசு, தீப்பெட்டி தொழிலை பாஜக ஆதரிக்கிறது! : ராம ஶ்ரீநிவாசன்
பாஜக, பட்டாசு, தீப்பெட்டி தொழிலை ஆதரிக்கிறது என பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம ஶ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து மக்கள் கட்சி சார்பில் இந்து எழுச்சி மாநாடு மற்றும் பட்டாசு வரி குறைப்புக்கு முயற்சித்த பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம ஶ்ரீசீனிவாசனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இதில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பாராட்டினார். அதைத்தொடர்ந்து பேசிய ராம ஶ்ரீசீனிவாசன், சீனாவின் சிகார் லைட்டர்களுக்கு தடை விதித்த பிரதமர் மோடி மற்றும் உறுதுணையாக இருந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
இந்தியாவின் மொத்த பட்டாசு உற்பத்தியில் 95 சதவீதம் சிவகாசியில் உற்பத்தியாவதாக கூறிய அவர், சிவகாசியில் குழந்தை தொழிலாளர்கள் அதிகம் உள்ளதாக பொய்யான தகவல் பரப்பப்படுவதாக வேதனை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சி பட்டாசு, தீப்பெட்டி தொழிலை ஆதரிப்பதாக தெரிவித்தார்.