செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பதவி உயா்வு பெற்ற 83 துணை காவல் கண்காணிப்பாளா்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு!

07:05 AM Jan 31, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

தமிழக காவல்துறையில் பதவி உயா்த்தப்பட்ட 83 துணைக் காவல் கண்காணிப்பாளா்களுக்கு புதிய பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழக காவல்துறையில் பதவி உயா்வு பெற்ற 83 துணைக் காவல் கண்காணிப்பாளா்களுக்கு பணியிடங்களை ஒதுக்கி டிஜிபி சங்கா் ஜிவால் நேற்று உத்தரவிட்டார்.

உளவுத்துறை ஆய்வாளராகப் பணியாற்றிய ஏ.வெங்கட கிருஷ்ண ராவ் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வுப் பிரிவு டிஎஸ்பியாகவும், நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளராகப் பணியாற்றிய சங்கரநாராயணன் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையராகவும், நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளராகப் பணியாற்றிய ஜி.மணிவண்ணன் ஆவடி மாநகர காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

புதிய பணியிடங்களில் நியமிக்கப்பட்ட 83 டிஎஸ்பிக்களும் ஓரிரு நாட்களில் பொறுப்பேற்பார்கள் என்று காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதேபோல், தமிழகம் முழுவதும் 16 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

Advertisement
Tags :
Deputy Superintendents of PoliceDGP shankar jiwalMAINNew posts allottedTamil Nadu Police
Advertisement