பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு - பேரணி செல்ல முயன்றவர்கள் கைது!
காஞ்சிபுரம் அடுத்துள்ள பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேரணி செல்ல முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 5 ஆயிரத்து 746 ஏக்கர் பரப்பளவில் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் என பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், அவர்களது போராட்டம் 900 -வது நாளை எட்டியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்துடன், அவரது நினைவிடம் நோக்கி பேரணியாக செல்ல ஏகானபுரம் கிராம மக்கள் முயன்றனர்.
அப்போது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கருணாநிதி நினைவிடத்தில் மனுவைத்து முறையிட திட்டமிட்டிருந்த நிலையில் போராட்டக் குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.