பல வழக்குகள் நிலுவையில் உள்ள போது செந்தில் பாலாஜி எவ்வாறு அமைச்சராக பொறுப்பேற்க முடியும் - உச்ச நீதிமன்றம் கேள்வி!
பல வழக்குகள் நிலுவையில் உள்ளபோது செந்தில் பாலாஜி எவ்வாறு அமைச்சராக பொறுப்பேற்க முடியும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு நீதிபதி அபே ஓகா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, பல வழக்குகள் நிலுவையில் உள்ளபோது செந்தில் பாலாஜி எப்படி அமைச்சராக பொறுப்பேற்க முடியும் என்றும், ஜாமின் கொடுத்த அடுத்த நாளே அமைச்சராக பொறுப்பேற்றது எந்த வகையில் நியாயம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் அமைச்சரானால் சாட்சிகள் பயப்படுவார்கள் என்றும், அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.
நீதி என்பது அனைவருக்கும் நியாயமானதாக இருக்க வேண்டும் என்றும், இதற்கு செந்தில் பாலாஜி உடனடியாக பதிலளிக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். உரிய விளக்கத்தை பிரமாணப் பத்திரமாக சமர்ப்பிக்க வேண்டும் உத்தரவிட்ட அவர், விசாரணையை வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.