செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் காவலர் கைது!

05:30 PM Jan 18, 2025 IST | Sivasubramanian P

கரூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

நெரூர் அடுத்த அரங்கநாதன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன். இவர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் கரூர் பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

மாணவி அளித்த புகாரின் பேரில், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், காவலர் இளவரசனை போக்சோ வழக்கில் கைது செய்தனர். இளவரசன் ஏற்கனவே உதவி காவல் ஆய்வாளர் ஒருவரை தாக்கிய புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் காவலர் பணிக்கு திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement
Tags :
MAINkarurconstable arrestsexually harassed a schoolgirlPOCSO Act.Ilavarasan arrestAranganathanpettai
Advertisement
Next Article